அருள் மிகு எட்டுக்கை அம்மன் ஆலயம்
எட்டுக்கை அம்மன்னின் சிறப்பு
எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை எட்டுக்கை அம்மன்.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.
ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.
வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
ஆலய வரலாறு
கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள்.
அந்த காலத்தில் வடக்கே வாழவந்தி நாட்டின் முடிவின் படி கொல்லிமலை, திருச்செங்கோடு வரை முப்பது சீமாக்கள் அதாவது முணூறு ஊர்களுக்கு பண்ணை குலத்தார் அதிபராகவும், திருச்செங்கொகோடு முதல் நாமக்கல் வரை முப்பது சீமாக்கள் முணுறு ஊர்களுக்கு சீர்மிகு செம்பூத்தார் வம்ச குலத்தார் ஆதிபராக பொருப்பேற்று பெருமை மிக்க புனித நல்லாட்சி சீறும் சிறப்புமாக நடைபெற்றது.
செம்பூத்தார் வம்சத்தினர் கீரம்பூர் எனும் பகுதியை தலைநகராகவும், பண்ணை குல வம்சத்தர் திருச்செங்கோட்டை தலை நகராகவும் கொண்டு நல்லாட்சி செய்து வந்தனர். அப்போது சமண மதத்தினரின் தூண்டுதலினால் வடக்கே காளஹஸ்தியிலிருந்து வடசேரி எனும் சிற்றரசன் தலைமையில் கீரம்பூர் தலைநகருக்குள் ஆயுத பலத்துடன் ஆயிரக்கணக்கான படையினர் முற்றுகையிட்டு மது,மாமிசங்கள் உண்டும், கொலை, கொள்ளைகள் போன்ற தீய செயல்களில் ஈடு பட்டனர்.
உடனடியாக சபையை கூட்டிய கீரம்பூர் அதிபர் திருவாளர் வீரப்ப கவுண்டர் தனது தளபதி குஞ்சான் கருப்பன் மூலம் திருச்செங்கோட்டை அதிபர் திருவாளர் வையாபுரி கவுண்டருக்கு தூது அனுப்பினார். அதன் படி உடனடியாக திரு வையாபுரி கவுண்டர் தனது தளபதி வேலப்பன் தளமையில் போர் படைகளை திரட்டி மூன்றாம் நாள் கீரம்பூர் நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் கீரம்பூர் போர் படைகளுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க போர் களத்தில் இறங்கினர்கள்.இதை அறிந்த எதிரி வடசேரி மேலும் படைகளை குவித்த வண்ணம் இருந்தான்.
இதனை எதிர் நோக்கி இருந்த த்ளபதிகள் குஞ்சான் கருப்பன் மற்றும் வேலப்பன் தலைமையில் இரு நாட்டு படைகளும் போர் களத்தில் புகுந்து எதிரி படைகளை பெரும்பாலும் அழித்தனர்.
எங்கு பார்த்தாளும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.
இனியும் தாமதிக்க கூடாது என்று மூத்தவர் எட்டிக் கவுண்டர் காலமெல்லாம் காவிரி தீர்த்த நீராட்டி , காராம் பசும் பால் ஊற்றி நாக கன்னிகையை வழிபட்டு வந்த புற்று கண்ணிலிருந்து எட்டுக்கையுடன் பரமேஸ்வரி அவதார விஸ்வரூபத்துடன் காட்சி தந்தாள்.
தோன்றிய அன்னை துஷ்ட எதிரிகளை சம்ஹாரம் செய்தும் , பணிய வைத்தும், புறமுதுகிட்டு ஓட செய்தாள்.நெருப்பு ஜுவாலையால் ரத்த களரியை சுத்தம் செய்து, காணும் இடமெல்லாம் எட்டி மர விருட்சங்களாகவும் செண்பக,ரோஜா மலர்கள் நிரைந்த சோலையாக காட்சி அளிக்க செய்தாள்.
மீண்டும் செம்பூத்தார், பண்ணை குலத்தார்களின் ஆட்சியை நிலைபெறசெய்தும் சைவ சித்தாந்த முறைபடி மட்டுமே வழிபாடு செய்ய அருளாசி வழங்கிய அன்னை எட்டுக்கை அம்மன் எட்டி மர விருச்சட்தின் புற்றிலேயே குடி கொண்டு விட்டாள்.
போரில் வெற்றி கொண்ட பண்ணை குலத்தாருக்கும் செம்பூத்தான் குலத்தாருக்கும் சம்பந்தம் செய்து கொள்ளவும் தனது ஆலய வழிபாட்டில் சம உரிமைகள் தந்தருளியும், நாடு நகரங்களை பகிர்ந்த்தளித்தும், செம்பூத்தான் வம்சத்தினர்க்கு பட்டமும், பண்ணை குல வம்சத்தினர்க்கு பரிவட்டமும் என நள் அருள் வழங்கினாள் அன்னை பரமேஸ்வரி.
தளபதிகள் குஞ்சான் கருப்பனையும் , வேலப்பனையும் சிறப்பு தெய்வங்களாக இன்றும் வழிபடபடுகிறது.
எங்கும் காணத கொங்கு குல தெய்வம் எட்டுக்கை அம்மன் அருள் எங்கும் நிறைக !
தொடர்பு
நிர்வாகி
அருள்மிகு எட்டுக்கைஅம்மன் திருக்கோவில்,
செம்பூத்தான்,பண்ணை குலமக்களின் குலதெய்வம்,
கீரம்பூர், நாமக்கல் 637 207.
அலுவலகம் 04286-267670.
அறங்காவலர் குழு தலைவர் :
S.கோபாலகிருஷ்ணண்.B.A.B.L., 09443331768
e-mail : ettukkaiamman@gmail.com
visit : www.ettukkaiamman.com
OM SAKHTHI
ReplyDeleteUPDATE MORE FESTIVAL POST IF ANY & IPORTANT DATES