Monday, March 23, 2009

தீரன் சின்னமைல

                                                     தீரன் சின்னமைல

              



ஈேராடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் ேமலப்பாைளயம் என்னும்
ஊ􀂾ல் பயிரன் குலத்தில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமைல.
ெபற்ேறார் இரத்தினச் சர்க்கைர - ெப􀂾யாத்தா தம்பதியினர். அவர்களின்
ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்ைத சின்னமைல.
இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அைழக்கப்பட்டார். பள்ளிப்
பருவத்தில் தீர்த்தகி􀂾ச் சர்க்கைர எனப் ெபயர் ெபற்றார். பைழய
ேகாட்ைடப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பைரயில் அைனவருக்கும்
'சர்க்கைர' என்பது ெபாதுப்ெபயர். 'புவிக்கும் ெசவிக்கும் புலேவார்கள்
ெசால்லும் கவிக்கும்' இனிைம ெசய்ததால் அப்ெபயர் ெபற்றார்களாம்.
இளவயதிேலேய தம்பியர் ெப􀂾யதம்பி, கிேலதார் ஆகியவர்கேளாடு
மல்யுத்தம், தடிவ􀂾ைச, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் ேபான்ற
ேபார்ப் பயிற்சிைய சிவந்தாைரயர் என்பார் வழிவந்தவ􀂾டம் சின்னமைல
கற்றுத் ேதர்ந்தார்.
மதுைர நாயக்கர் வசமிருந்த ெகாங்கு நாட்டுப் பகுதிைய ைமசூரார்
ைகப்பற்றியதால் ெகாங்கு நாட்டு வ􀂾ப்பணம் சங்ககி􀂾 வழியாக ைமசூர்
அரசுக்குச் ெசன்றது. ஒருநாள் ேவட்ைடக்குச் ெசன்ற தீர்த்தகி􀂾 ைமசூர்
ெசல்லும் வ􀂾ப்பணத்ைதப் பிடுங்கி ஏைழகட்கு வினிேயாகித்தார். வ􀂾
தண்டல்கார􀂾டம் 'ெசன்னிமைலக்கும் சிவன்மைலக்கும் இைடயில் ஒரு
சின்னமைல பறித்ததாகச் ெசால்' என்று ெசால்லி அனுப்பி னார். அது
முதல் தீர்த்தகி􀂾க்குச் 'சின்னமைல' என்ற ெபயர் வழங்கலாயிற்று.
கிழக்கிந்தியக் கம்ெபனியினர் ெகாஞ்சம் ெகாஞ்சமாக நாட்டில்
ஆதிக்கம் ெசலுத்துவைதத் தடுக்க ேவண்டும் என்று சின்னமைல
விரும்பினார். மைலயாளத்திலும் ேசலம் பகுதியிலும் காலூன்றிய
கம்ெபனிப்பைட ஒன்றுேசராவண்ணம் இைடயில் ெபரும் தைடயாகச்
சின்னமைல விளங்கினார்.
7.12.1782 இல் ஐதர்அலி மைறவிற்குப் பின் திப்புசுல்தான் ைமசூர்
சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து 'ெவள்ைளத் ெதாப்பியைர'
எதிர்த்துக் கடும் ேபார் ெசய்து வந்தார். சின்னமைல ஆயிரக்கணக்கான
ெகாங்கு இைளஞர்கைளத் திரட்டி ைமசூர் ெசன்றார். சின்னமைலயின்
'ெகாங்குப்பைட' சித்ேதசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் ேபார்களில்
திப்புவின் ெவற்றிக்குப் ெப􀂾தும் உதவியது. குறிப்பாக 40,000
வரீ ர்கேளாடு மழவல்லியில் ேபா􀂾ட்ட ெவள்ைளயர் பைடகட்குக்
ெகாங்குப்பைட ெபரும் ேசதத்ைத உண்டாக்கியது.
ெநப்ேபாலியனிடம் பைட உதவி ேகட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய
தூதுக்குழுவில் சின்னமைலயின் ெமய்க்காப்பாளன் கருப்பேசர்ைவயும்
இடம் ெபற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் ைமசூர்ப் ேபா􀂾ல் 4.5.1799-இல் கன்னட நாட்டின்
ேபார்வாள் ஆன திப்புசுல்தான் ேபார்க்களத்தில் வரீ மரணம் எய்திய பின்
சின்னமைல ெகாங்குநாடு வந்து ஓடாநிைல என்னும் ஊ􀂾ல் ேகாட்ைட
கட்டிப் ேபாருக்குத் தயார் ஆனார்.
ஏற்ெகனேவ 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மைல - பட்டாலிக்
காட்டில் வரீ ர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயா􀂾த்தார்.
ஓடாநிைலயில் பிெரஞ்சுக்காரர் துைணேயாடு பீரங்கிகளும் தயா􀂾க்கப்
பட்டன.
தீர்த்தகி􀂾ச் சர்க்கைர உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று
சின்னமைல தன்ைனப் பாைளயக்காரராக அறிவித்துக் ெகாண்டு
ெகாங்குநாட்டுப் பாைளயக்காரர்கைள ஓரணியில் ேசர்க்க முற்பட்டார்.
ேபாராளிகளின் கூட்டைமப்ைப ஏற்படுத்தி விருப்பாட்சி ேகாபால
நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவரீ ர் தூண்டாஜிவாக்,
பரமத்தி அப்பாச்சி ஆகியவர்கேளாடு இைணந்து 3.6.1800 அன்று ேகாைவக்
ேகாட்ைடையத் தகர்த்து அங்கிருந்து ெலப்டினன்ட் கர்னல் ேக.
மக்ஸிஸ்ட􀂾ன் கம்ெபனியின் 5 ஆம் பட்டாளத்ைத அழிக்க ேகாைவப்
புரட்சிக்குச் சின்னமைல திட்டமிட்டார். முந்தியநாேள ேபாராளிகள்
அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்ைடையத் ெதாடங்கியதால்
ேகாைவப்புரட்சி ேதால்வியுற்றது.
இைடயறாத ேபார் வாழ்விலும் பல ேகாயில்களுக்குத்
திருப்பணிகள் ெசய்தார். புலவர் ெபருமக்கைள ஆத􀂾த்தார். சின்னமைல
ேகாயில் ெகாைட பற்றிய கல்ெவட்டுகள் சிவன்மைல, பட்டாலி,
கவுண்டம்பாைளயம் ஆகிய ஊர்களில் உள்ளன.
சமூக ஒற்றுைம சின்னமைலயிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.
அவர் கூட்டைமப்பில் ேவளாளர், நாயக்கர், ேவட்டுவர் பாைளயக்காரர்கள்
பலர் இருந்தனர். ஓமலூர் ேசமைலப் பைடயாச்சி, கருப்பேசர்ைவ, பத்ேத
முகம்மது உேசன், முட்டுக்கட்ைடப் ெபருமாத்ேதவன் ெசன்னிமைல
நாடார் ஆகிேயார் பலர் சின்னமைல பைடயில் முக்கியம்
ெபற்றிருந்தனர்.
சில பாைளயக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி
ேவரூன்றுவைத எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சிையக் காப்பாற்றிக்
ெகாள்ளேவ என்ற கருத்தும் சில􀂾டம் உண்டு. ஆனால் சின்னமைல தன்
ஆட்சிையத் தக்க ைவத்துக்ெகாள்ள அல்ல, உண்ைமயான நாட்டுப்
பற்றுடன் ேபா􀂾ட்டார்.
எப்படியாவது சின்னமைலைய ஒழிக்க ேவண்டும் என்று
ஆங்கிேலயர் முடிவு ெசய்தனர். 1801-இல் ஈேராடு காவி􀂾க்கைரயிலும்,
1802-இல் ஓடாநிைலயிலும், 1804- இல் அறச்சலூ􀂾லும் நைடெபற்ற
ேபார்களில் சின்னமைலேய ெபரும் ெவற்றி ெபற்றார். ஓடாநிைலப்
ேபா􀂾ல் ஆங்கிலத் தளபதி கர்னல் ேமக்ஸ்ெவல் தைலையக் ெகாய்து
ெமாட்ைடயடித்துச் ெசம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது
குறிப்பிடத்தக்கது. சின்னமைலயின் ஓடாநிைலக் ேகாட்ைடையத்
தகர்க்கக் கள்ளிக்ேகாட்ைடயிலிருந்து மிகப்ெபரும் அளவில்
பீரங்கிப்பைட வந்தது. சுேபதார் ேவலப்பன் அறிவுைரப்படி சின்னமைல
ஓடாநிைலயிலிருந்து தப்பிப் பழனிமைலத் ெதாட􀂾ல் உள்ள கருமைல
ெசன்றார்.
ேபா􀂾ல் சின்னமைலைய ெவல்ல முடியாது என்று கண்ட
ஆங்கிேலயர் சூழ்ச்சி மூலம், சின்னமைலையக் ைகது ெசய்து சங்ககி􀂾க்
ேகாட்ைடக்குக் ெகாண்டு ெசன்று ேபாலி விசாரைண நடத்தி 31.7.1805
அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப ேசர்ைவயும் உடன்
வரீ மரணம் எய்தினர்.
சின்னமைல நிைனத்திருந்தால் ெகாங்குநாட்டு நிர்வாகப்
ெபாறுப்ைப ஏற்றுக்ெகாண்டு வ􀂾வசூலில் பத்தில் மூன்றுபங்கு ெபற்றுத்
ெதாடர்ந்து ஆட்சி ெசலுத்தி சுேதச சமஸ்தானம்ேபால 1947 வைர
விளங்கியிருக்கலாம். ஆங்கிேலயரும் அவ்வாேற ேவண்டிக்ெகாண்டனர்.
ஆனால் சின்னமைல அைத மறுத்து வரீ மரணம் அைடந்தார்.
சின்னமைல ஆங்கில ெவள்ளத்ைதத் தடுக்கும் ெபருமைலயாக
விளங்கினார். முன்பு அவர் நிைனவாகப் ேபாக்குவரத்துக் கழகமும், தனி
மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமைலக்குத் தமிழக அரசு
ெசன்ைனயில் உருவச்சிைல ஒன்ைற அைமத்தது. தமிழக அரசின்
சார்பில் ஓடாநிைலயில் சின்னமைல நிைனவு மணிமண்டபம்
உருவாகி வருகிறது. ஈேராடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத்
தீரன் சின்னமைல மாளிைக என்று ெபயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17
அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மைறந்த ஆடிப் பதிெனட்டு
நாளிலும் அவருக்கு அஞ்சலி ெசலுத்திக் ெகாங்கு மக்கள் தங்கள்
நன்றிையச் ெசலுத்துகின்றனர்.
இந்திய அரசின் தபால்தந்தி தகவல் ெதாடர்புத்துைற 31.7.2005 அன்று
தீரன் சின்னமைல நிைனவு அஞ்சல் தைல ெவளியிட்டுள்ளது.
தீரன் சின்னமைலயின் சிைல
ெசன்ைன அண்ணாசாைல (கிண்டி)
தீரன் சின்னமைல மணிமண்டபம்
ஓடாநிைல

Tuesday, March 10, 2009

THIRUKKURAL OF THIRUVALLUVAR



"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"


தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய

* அறம் அல்லது தர்மம்
* பொருள்
* இன்பம் அல்லது காமம்


ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை.

அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

"அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Friday, March 6, 2009

Ettukkaiamman Temple History and Other details





அருள் மிகு எட்டுக்கை அம்மன் ஆலயம்


எட்டுக்கை அம்மன்னின் சிறப்பு

எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை எட்டுக்கை அம்மன்.

இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.

மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.

அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.

ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.

வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

ஆலய வரலாறு
கொங்கு என்றால் தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில் ஒரே குலம் ஒருவனே தேவன் என உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள்.

அந்த காலத்தில் வடக்கே வாழவந்தி நாட்டின் முடிவின் படி கொல்லிமலை, திருச்செங்கோடு வரை முப்பது சீமாக்கள் அதாவது முணூறு ஊர்களுக்கு பண்ணை குலத்தார் அதிபராகவும், திருச்செங்கொகோடு முதல் நாமக்கல் வரை முப்பது சீமாக்கள் முணுறு ஊர்களுக்கு சீர்மிகு செம்பூத்தார் வம்ச குலத்தார் ஆதிபராக பொருப்பேற்று பெருமை மிக்க புனித நல்லாட்சி சீறும் சிறப்புமாக நடைபெற்றது.

செம்பூத்தார் வம்சத்தினர் கீரம்பூர் எனும் பகுதியை தலைநகராகவும், பண்ணை குல வம்சத்தர் திருச்செங்கோட்டை தலை நகராகவும் கொண்டு நல்லாட்சி செய்து வந்தனர். அப்போது சமண மதத்தினரின் தூண்டுதலினால் வடக்கே காளஹஸ்தியிலிருந்து வடசேரி எனும் சிற்றரசன் தலைமையில் கீரம்பூர் தலைநகருக்குள் ஆயுத பலத்துடன் ஆயிரக்கணக்கான படையினர் முற்றுகையிட்டு மது,மாமிசங்கள் உண்டும், கொலை, கொள்ளைகள் போன்ற தீய செயல்களில் ஈடு பட்டனர்.

உடனடியாக சபையை கூட்டிய கீரம்பூர் அதிபர் திருவாளர் வீரப்ப கவுண்டர் தனது தளபதி குஞ்சான் கருப்பன் மூலம் திருச்செங்கோட்டை அதிபர் திருவாளர் வையாபுரி கவுண்டருக்கு தூது அனுப்பினார். அதன் படி உடனடியாக திரு வையாபுரி கவுண்டர் தனது தளபதி வேலப்பன் தளமையில் போர் படைகளை திரட்டி மூன்றாம் நாள் கீரம்பூர் நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.



அவர்கள் கீரம்பூர் போர் படைகளுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க போர் களத்தில் இறங்கினர்கள்.இதை அறிந்த எதிரி வடசேரி மேலும் படைகளை குவித்த வண்ணம் இருந்தான்.

இதனை எதிர் நோக்கி இருந்த த்ளபதிகள் குஞ்சான் கருப்பன் மற்றும் வேலப்பன் தலைமையில் இரு நாட்டு படைகளும் போர் களத்தில் புகுந்து எதிரி படைகளை பெரும்பாலும் அழித்தனர்.

எங்கு பார்த்தாளும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது.

இனியும் தாமதிக்க கூடாது என்று மூத்தவர் எட்டிக் கவுண்டர் காலமெல்லாம் காவிரி தீர்த்த நீராட்டி , காராம் பசும் பால் ஊற்றி நாக கன்னிகையை வழிபட்டு வந்த புற்று கண்ணிலிருந்து எட்டுக்கையுடன் பரமேஸ்வரி அவதார விஸ்வரூபத்துடன் காட்சி தந்தாள்.

தோன்றிய அன்னை துஷ்ட எதிரிகளை சம்ஹாரம் செய்தும் , பணிய வைத்தும், புறமுதுகிட்டு ஓட செய்தாள்.நெருப்பு ஜுவாலையால் ரத்த களரியை சுத்தம் செய்து, காணும் இடமெல்லாம் எட்டி மர விருட்சங்களாகவும் செண்பக,ரோஜா மலர்கள் நிரைந்த சோலையாக காட்சி அளிக்க செய்தாள்.

மீண்டும் செம்பூத்தார், பண்ணை குலத்தார்களின் ஆட்சியை நிலைபெறசெய்தும் சைவ சித்தாந்த முறைபடி மட்டுமே வழிபாடு செய்ய அருளாசி வழங்கிய அன்னை எட்டுக்கை அம்மன் எட்டி மர விருச்சட்தின் புற்றிலேயே குடி கொண்டு விட்டாள்.

போரில் வெற்றி கொண்ட பண்ணை குலத்தாருக்கும் செம்பூத்தான் குலத்தாருக்கும் சம்பந்தம் செய்து கொள்ளவும் தனது ஆலய வழிபாட்டில் சம உரிமைகள் தந்தருளியும், நாடு நகரங்களை பகிர்ந்த்தளித்தும், செம்பூத்தான் வம்சத்தினர்க்கு பட்டமும், பண்ணை குல வம்சத்தினர்க்கு பரிவட்டமும் என நள் அருள் வழங்கினாள் அன்னை பரமேஸ்வரி.
தளபதிகள் குஞ்சான் கருப்பனையும் , வேலப்பனையும் சிறப்பு தெய்வங்களாக இன்றும் வழிபடபடுகிறது.

எங்கும் காணத கொங்கு குல தெய்வம் எட்டுக்கை அம்மன் அருள் எங்கும் நிறைக !
தொடர்பு
நிர்வாகி

அருள்மிகு எட்டுக்கைஅம்மன் திருக்கோவில்,
செம்பூத்தான்,பண்ணை குலமக்களின் குலதெய்வம்,
கீரம்பூர், நாமக்கல் 637 207.

அலுவலகம் 04286-267670.

அறங்காவலர் குழு தலைவர் :
S.கோபாலகிருஷ்ணண்.B.A.B.L., 09443331768

e-mail : ettukkaiamman@gmail.com
visit : www.ettukkaiamman.com